6 வருடங்களுக்கு பின்பு மாறிய கெட்டப்! கேஜிஎஃப் யாஷ் இப்போ எப்படியிருக்கிறார் பாருங்க
உலக அளவில் பிரபலமான கே ஜி எப் படத்தின் நடிகரான யாஷ் ஆறு ஆண்டுகளுக்கு பின்பு தனது தோற்றத்தினை மாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராக்கிங் ஸ்டார்
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பின்ப பல படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் பிரபலமாக்கிய திரைப்படம் கே.ஜி.எப். ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பினை பெற்றது.
ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
கே.ஜி.எஃப் 2
தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உலக அளவில் பயங்கர பிரபலமாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளதுடன், பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
அதோடு இரண்டாம் பாகம் கொரோனா காரணமாக 2020 இல் இருந்து வெளியீடு தேதி ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் நேற்று கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது.
படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் செல்லும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
தாடி முடியை வெட்டிய யாஷ்:
இந்த நிலையில் நடிகர் யாஷ் ஆறு ஆண்டுகளுக்கு பின்பு தனது தோற்றத்தினை மாற்றியுள்ள காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. கேஜிஎப் 2வை தொடர்ந்து யாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.
கேஜிஎப் படத்திற்காக தாடி மற்றும் நீண்ட முடியுடன் ஐந்து ஆண்டுகளாக வலம் வந்தார் யாஷ். தற்போது தன்னுடைய தாடியை எடுத்து செம மாஸ் ஆன லுக்கில் இருக்கிறார். சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளி லைக்ஸை குவித்து வருகின்றது.
