கேஜிஎப் 3 பாகம் எப்போது தெரியுமா? உலகையே அதிரவைக்கும் செம்ம அப்டேட்!
கன்னட சினிமாவான இயக்குனர் பிரசாந்த் சீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் தான் கேஜிஎப்.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகபெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது பாகம் பான் இந்தியா வெளியீடாக ரிலீஸ் ஆகி வசூல் மழை பொழிந்த இப்படத்தை இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்தது.
இதுவரை சுமார் 1200 கோடி ரூபாய் வரை வசூல் புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகத்துக்குத் தற்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இத்திரைப்படத்தில் இயக்குனரின் படைப்பும், யஷ் நடிப்பும் உலகளவில் ஹிட் அடித்து பேசப்பட்ட நிலையில், 3வது பாகம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2024ல் வெளியீடு
அந்த வகையில், சில சுவாரஸ்ய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இப்படத்தின் 3வது பாகம் இந்த ஆண்டு இறுதி டிசம்பரில் தொடங்கப்போவதாகவும், படத்தின் தயாரிப்பாளர் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அவெஞ்சர்ஸ் பட வரிசைகளைப் போல் கே.ஜி.எஃப்பையும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்க உள்ளதாகவும், படத்தை 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளார்.
இதனால், ஹாலிவுட் லெவலில் இருக்கப்போகும் என்கிற தகவல் ரசிகர்களை இன்னும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. என்ன இருந்தாலும் இரண்டு வருடம் வரை காத்திருக்க தானே வேண்டும்...