18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது–சுக்கிரன் சேர்க்கை: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், மற்ற கிரகங்களுடன் சேர்ந்து பயணிப்பதும் உண்டு.
இத்தகைய கிரக நிலை மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், சுக்கிரன் ஜூலை 4 அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்ததால், கேது-சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அரிய சேர்க்கை ஆகஸ்ட் 1 வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும் என ஜோதிடம் கூறுகிறது. இந்த கேது–சுக்கிரன் சேர்க்கை ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்களை தருப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில்
12 ராசிகளுக்குமான பலன்கள்

மேஷம்: காதல் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். பிள்ளைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. பணியில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
ரிஷபம்: குடும்ப விஷயங்களில் பொறுமை அவசியம். வீடு, வாகனம் வாங்கும் முடிவுகளை கவனமாக எடுக்கவும். செலவுகள் அதிகரித்தாலும், உழைப்புக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம்: தன்னம்பிக்கை உயரும். நிலுவை பணிகள் வெற்றிகரமாக முடியும். உடன்பிறந்தோரின் ஆதரவும், பயணங்களால் நன்மையும் கிடைக்கும்.புதிய நட்புகள் எதிர்காலத்தில் பலன் தரும்.
கடகம்: நிதி விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானம் தேவை. புதிய முதலீடுகளை ஒத்திவைப்பது நல்லது.
சிம்மம்: ஆளுமை கவர்ச்சியாக இருக்கும். மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால், உறவுகளிலும் வேலையிலும் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். கன்னி: வெளிநாடு தொடர்பான தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செலவுகளையும் உடல்நலத்தையும் கவனிக்க வேண்டும்.
துலாம்: புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களால் நன்மை கிடைக்கும். நிலுவைப் பணம் கைக்கு வரும். உறவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்.
விருச்சிகம்: தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவும், நல்ல பெயரும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும்.
தனுசு: அதிர்ஷ்டம் நிறைந்த காலம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட பயணங்களால் லாபமும், மாணவர்களுக்கு தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.
மகரம்: திடீர் வருமானம் கிடைக்கலாம். அதே நேரத்தில் செலவுகளும் கூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் முழுமையாக சரிபார்க்கவும்.
கும்பம்: திருமண வாழ்க்கையில் சமநிலையைப் பேணுங்கள். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மீனம்: எதிரிகளை வெல்வீர்கள். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வருமானம் உயரும். உடல்நலத்தில் கவனம் செலுத்தி, உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவைப் பின்பற்றுங்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |