இன்றிலிருந்து ஆரம்பிக்கும் கேது நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.
இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது.
அந்தவகையில், நவக்கிரகங்களின் நிழல் கிரகமாக இருக்கும் கேது பின்னோக்கி வக்ரமாகும் நிலையில் இதுவரை துலாம் ராசியில் இருந்த கேது இன்றிலிருந்து நட்சத்திரத்திற்கு மாற்றமடையவிருக்கிறார்கள்.
அந்தவகையில், கேது சித்திரை நட்சத்திரத்திற்கு செல்லவிருப்பதால் அதன் தாக்கம் 3 ராசிகளை தாக்கவிருக்கிறது. அந்த 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்.
கடகம்
இந்த கேது நட்சத்திரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மோசமான பலன்களைக் கொடுக்கிறது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம். மன உளைச்சல் அதிகரித்துக் கொண்டு இருக்கும். முக்கியமாக தாயின் உடல் நிலைப்பாதிக்கப்படும். அதிலும் தாயுடன் பேணப்பட்டு வந்த உறவு மோசமாகும். இந்தக் காலக்கட்டத்தில் எவ்வித சொத்துக்களையும் வாங்கவும் விற்கவும் வேண்டாம் இதனால் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
மகரம்
இந்த கேது நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தந்தையுடன் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் சக தொழிலாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் அதில் வெற்றிப் பெற கடினமாகவும் போராடவும் வேண்டியிருக்கும். குழந்தைகளாலும் பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
மீனம்
இந்த கேது நட்சத்திரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படும். அதிலும் முக்கியமாக ஆரோக்கியப் பிரச்சினையால் அதிகம் அவதிப்படுவீர்கள். காயங்கள் மற்றும் அதிக வலிகள் ஏற்படும். முதலீடு செய்யும் விவகாரங்களில் அதிகம் தலையிட வேண்டாம் அதனால் இழப்புகள் ஏற்படும். பயணம் செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |