அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்ட மழை! கேதுவால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
மற்ற கிரகங்களைப் போல் கேதுவிற்கு சொந்த ராசி இல்லை. மேலும், எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும் கேது, சனி பகவானுக்கு அடுத்தபடியாக ஒரு ராசியில் நீண்ட காலம், அதாவது சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார்.

தற்போது கேது சிம்ம ராசியில், மகம் நட்சத்திரத்தில் உள்ளார். ஜோதிட ரீதியாக, கேதுவின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்து, திடீர் நிதி ஆதாயம், தடைபட்ட வேலைகளில் வெற்றி, நல்ல அதிர்ஷ்டம் போன்ற பலன்களைத் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின்னர் கடக ராசிக்குள் நுழைவார். எனவே, அடுத்த 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையப் போகிறது.அப்படி கேதுவால் பல்வேறு வழிகளிலும் சாதக நன்மைகளை பெறபோகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

கேதுவின் நிலையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், பணியிடத்தில் உங்கள் செயல்திறனும் பாராட்டப்படும்.
நீண்ட கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்

கேதுவின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். புதிய நட்புகள் உருவாகி, அவை எதிர்காலத்தில் நன்மை தரும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்

கேதுவின் நிலையால் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை உணர்வீர்கள். குறிப்பாக புதிய தொழில் முயற்சிகள் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |