மாலை மாற்றி திருமணம்! வைரலாகும் லெஸ்பியன் ஜோடியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்
இந்தியாவில் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரினச் சேர்க்கை, ஒருபால் திருமணம் போன்ற விடயங்கள் இன்று அளவிலும் தீண்டத்தகாத விடயங்களாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கேரளாவை சேர்ந்த இரண்டு தோழிகள் உயர் நீதிமன்றின் உதவியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
அதிலா நாசாரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரண்டு தோழிகளும் போட்டோ ஷுட் உள்ளிட்ட நவீன திருமண படிமுறைகளையும் கலாச்சார அடிப்படையில் மாலை மாற்றியும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
எனினும் இந்தியாவில் ஒரு பால் திருமணம் தடை செய்யப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஏனைய திருமணங்களைப் போன்று மாலை மாற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
குடும்ப உறவினர்கள் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் குடும்ப பெயரை பயன்படுத்துவதை விரும்பவில்லை எனவும் நாசாரின் தெரிவித்துள்ளார்.
எனினும் பணியிடம் மற்றும் வேறு இடங்களில் தன்னுடைய தந்தையின் பெயரை பயன்படுத்தி வருவதாக நாசாரின் தெரிவிக்கின்றார்.
அண்மையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது தந்தையின் பெயரை கூற நேரிட்டதாகவும் அது கவலை அழிப்பதாகவும் நாசாரின் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையிலான உறவு குறித்து அறிந்து கொண்ட பெற்றோர் உடனடியாக இந்த தொடர்பினை துண்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பெற்றோரின் அழுத்தம் காரணமாக கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள மாற்று பாலின உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஓர் நிறுவனத்தில் இந்த இருவரும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதாக கூறி இந்த இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் இருவரையும் சந்திக்க விடாமல் பிரித்து விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பாத்திமாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதாக கூறிய போதிலும் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு அவரை தடுத்து வைத்துள்ளனர்.
இந்த காதல் ஜோடியை பிரித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இருவரும் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த கேரள உயர் நீதிமன்றம் இருவரையும் சேர்த்து வைத்து தீர்ப்பளித்துள்ளது.