சுடு சாதத்திற்கு கேரளா தேங்காய் மீன் குழம்பு - வெறும் 7 பொருட்கள் போதும்
பாரம்பரிய கேரளா தேங்காய் மீன் குழம்பை வெறும் 7 பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேங்காய் மீன் குழம்பு
கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் எப்போதும் மீன் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் கேரளா பகுதியில் மீன் குழம்பு என்றால் சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த குழம்பு செய்ய வெறும் 7 பொருட்கள் இருந்தா போதும். கமகம என்று மணக்க மீன் கேரளாவின் தேங்காய் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மீன்,
- தேங்காய்,
- புளி,
- சின்ன வெங்காயம்,
- மிளகாய்த்தூள்,
- மஞ்சள்தூள்,
- சீரகம்
- உப்பு தேவைக்கு
செய்யும் முறை
இந்த குழம்பு செய்ய எந்த வகை மீன் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்கு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போன்ற மசாலாக்களை எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் கால் கப் சூடான நீரில் புளியை ஊறவைக்கவும். இது தேங்காயுடன் சேர்த்து அரைக்க எளிதாக இருக்கும். பின்னர் மீனை குறைந்தது 10 நிமிடங்களாவது மசாலாவில் ஊறவைக்க வேண்டும்.
இதன பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த மசாலாவை மீன் துண்டுகளில் தடவவும்.

தடவிய பின்னர் மீன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, மசாலா நன்கு சேரும்படி கலக்கவும். அடுத்து சின்ன வெங்காயத்தை நறுக்கி, மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம், மற்றும் ஊறவைத்த புளியுடன் (தண்ணீருடன்) சேர்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, மென்மையான அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை ஒரு ஆழமான பாத்திரதே்தில் போடவும். அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையை மெதுவாகக் கொதிக்க விடவும். பின்னர் தீயைக் குறைத்து, ஊறவைத்த மீன் துண்டுகளை கவனமாகச் சேர்த்து சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக, குழம்பின் மேல் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, உடனனே அடுப்பை அணைக்கவும். வாசனைக்கு, கறிவேப்பிலையை கைகளால் நசுக்கி மேலே தூவலாம். அவ்வளவு தான் கேரளாவின் தேங்காய் மீன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |