விஜய் நடிப்பை விடப்போவது தெரிந்து கதறி அழுத சிறுமி .... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி

Vinoja
Report this article
தமில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விஜய் விலகவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விஜய்யின் குட்டி ரசிகை யார்?
அந்த வகையில் விஜய்யின் குட்டி ரசிகையான ஒரு குழந்தை, அழுகும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில், அந்த குழந்தையிடம் விஜய் இன்னும் இரண்டு படங்களில் மட்டும் தான் நடிப்பதாகவும் பின்பு நடிப்பை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளதாகவும் மலையாளத்தில் கூறுகின்றனர்.
அதை கேட்ட அக்குழந்தை கண்கலங்கி அழுகின்றது. தற்போது குறித்த காணொளி இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
