அம்மா, அப்பா கடைசி ஆசையை நிறைவேற்றிய கெனிஷா- சர்ச்சைக்குள்ளாகிய பாடகியின் மறுபக்கம்
அம்மா, அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றி விட்டேன்.. என பாடகி கெனிஷா பிரான்சிஸ் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கெனிஷா பிரான்சிஸ்
உலக அளவில் பிரபலமான பாடகி தான் கெனிஷா பிரான்சிஸ்.
இவர் பாடகி மட்டுமல்ல டான்ஸர், பல மொழிகளில் பாடக் கூடியவர், மற்றும் பல பிஸ்னஷ் செய்வதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வளவு திறமைகள் கொண்ட பாடகி கெனிஷா தான் நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கெனிஷா ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “ என்னுடைய அப்பா, அம்மா இருவரும் நன்றாக பாடக் கூடியவர்கள். அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் தற்போது சாதித்து வருகின்றேன். ஆனால் இவற்றை பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் இந்த உலகில் இல்லை. மாறாக அவர்கள் எங்கோ இருந்து என்னை ஆசீர்வதிப்பார்கள்...” என பேசியிருக்கிறார்.
இவர் பேசியதை கேட்கும் போது சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகுவது போல் இருக்காது என ரசிகர்கள் கெனிஷாவிற்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |