அமைதி மிகவும் சுவையாக இருக்கிறது... தனிமையில் கெனிஷா! புதிய பதிவால் குழப்பம்
பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் எதை குறிப்பிடுகின்றார் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கெனிஷா பிரான்சிஸ்
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன், அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவர் ஒரு பக்கம் இருக்க ஆர்த்தி ரவியும் தன் பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு வந்தார்.
இவர்கள் இந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பினர்.
அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார்.குறித்த விடயம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் பாடகி கெனிஷா பிரான்சிஸின் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு, அமைதியின் என் விருப்பங்கள். அமைதி மிகவும் சுவையாக இருக்கிறது... என்ற வாசகத்தை குறிப்பிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைபடங்களில் கெனிஷா தனிமையில் இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளதுடன் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |