முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்.... படுவைரலாகும் புகைப்படங்கள்
தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடினார். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தனது பிறந்த நாளை கொண்டாடி வந்த அவர், இந்த ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராக தனது பிறந்த நாளை கொண்டாடியிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றது.
முதல்வர் விஜயின் பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல்
நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன் கணவடன் நேரில் சந்தித்து முதல்வர் விஜய்க்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த புகைப்படங்ககளை அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இணைந்து கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில், விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பதிவில் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

உருக்கமான பதிவு
அவர் தனது பதிவில்,
“இத்தனை ஆண்டுகளாக உங்கள் பிறந்த நாள் என்பது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே இருந்தது. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் அல்லது புதிய திரைப்பட அறிவிப்பு என ஏதாவது ஒரு சிறப்பு பரிசை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு வழக்கமாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையை சுமக்கும் தலைவராக நீங்கள் புதிய பொறுப்பில் பயணிக்கிறீர்கள்.
இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும். உங்கள் சேவை மக்களுக்கு பல நன்மைகளை கொண்டு வர வேண்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு மற்றும் விஜயுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |