அரசியலில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்? எந்த கட்சியில்ன்னு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அரசியலில் கீர்த்தி சுரேஷ்?
நடிகை சுரேஷ் தனக்கு கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளை அழகாக பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்து பாராட்டையும், விருதையும் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் உதயநிதியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் இறங்கப்போவதாக தகவல் தீயாய் பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திமுக கட்சியில் சேரப்போவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |