கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கருப்பு சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி... சொக்கிப்போன ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு சேலையில் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் ஹிந்தியில் அறிமுகமாகிய பேபி ஜான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திலும் தாலியை அணிந்திருப்பதால் ரசிகர்கள் மததியில் பெரும் பராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.
முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்துக்கும் தாலிக்கும் இவர் செலுத்தும் மரியாதை ரசிகர்களின் மனதில் கீர்த்தி சுரேஷ் மீதான மதிப்பை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ட்ரெண்டிங்கான கருப்பு சேலையில் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |