கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறித்து விளையாடிய நடிகர் சிரஞ்சீவி - வைரல் வீடியோ
கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறித்த நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறித்து விளையாடிய சிரஞ்சீவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் தமன்னா, கீர்த்தி சுரேஷ் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில், நடிகர் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் பேசி சிரித்துக் கொண்டிருக்கையில், கீர்த்தி சுரேஷ் ஏதோ ஒன்றை கூற, அதற்கு நடிகர் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறுத்தார்போல் நெறுத்து சிரிக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... சிரஞ்சீவி சார் இவ்வளவு சகஜமாக சிரித்துப் பேசுகிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.