திடீரென கீர்த்தி சுரேஷிற்கு வந்த ஆசை- சிவகார்த்திகேயன் சம்மதிப்பாரா? ஓபன் டாக்
"எனக்கு ஒரு ஆசை இருக்கிறது..” என நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் “மகாநடி” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் “ரகு தாத்தா” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஆண்களின் அடக்குமுறையை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்பதனை கருப்பொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு ஒரு ஆசை இருக்கு..
இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சிவாகார்த்திகேயன் பற்றி ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ சிவகார்த்திகேயனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவர் ஒரு நாள் மூன்று குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறார்? எவ்வளவு கலகலவென இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது” என பேசியிருக்கிறார்.
இவர்கள் ஒன்றாக இணைந்து தமிழ் சினிமாவில் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |