திருமணத்தின் தூங்கி விழுந்த நடிகை.. இவருக்கே இந்த நிலையா? கலாய்க்கும் ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மேக்கப் போடும் பொழுது தூங்கி விழுந்த காட்சியொன்று இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக இரண்டு மதமுறைப்படி நடந்து முடிந்தது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தற்போது, பட பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்.
தூங்கி வழிந்த நடிகை
இந்த நிலையில், ஹிந்தி படமான பேபி ஜான் பட நிகழ்விற்கு கழுத்தில் தாலியுடன் மாடர்ன் உடையில் வந்திருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இப்படியொரு சமயத்தில் திருமணத்தன்று மேக்கப் போடும் கீர்த்தி சுரேஷ் தூங்கி விழுந்த காணொளியொன்று வைரலாகி வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து ஓய்வு இல்லாமல் வேலைகள் செய்து வந்ததால் இந்த நிலைமையா? என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அதே சமயம், ஓய்வில்லாமல் கீர்த்தி சுரேஷ் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |