திருமணத்தின் பின் ஆண்டனிக்குதான் இது கொஞ்சம் புதுசு... வெளிபடையாக பேசிய கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் ஹிந்தியில் அறிமுகமாகிய பேபி ஜான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
குறித்த புரொமோஷன் நிகழ்வுகளில் ட்ரெண்டிங் உடையில் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் கலந்துக்கொண்டு கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து தல பொங்கலையும் கொண்டாடியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியிருக்கும் எனது கணவருக்கு இது புதுசு, இன்ஸ்டா பக்கத்தையை அவர் பிரைவேட்டாக தான் வைத்துள்ளார்.
அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், மீடியா அட்டென்ஷன் எல்லாம் அவருக்கு கிடையாது. எங்கு சென்றாலும் மீடியாக்கள் போட்டோ, வீடியோ எடுக்கிறாங்க, எனக்கு அது பழகிவிட்டது.
ஆனால் என்னுடைய கணவருக்கு இந்த ஒரு விஷயம் தான் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து நடந்து கொள்கிறார் என்றார் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |