அஜித்துடன் அப்படி நடிக்க மாட்டேன்... கீர்த்தி சுரேஷ் உறுதி!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த 15ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்ற நிலையில், நடிகர் அஜித் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ள விடயமொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.
இவர் நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் தனக்கென சினிமா துறையில் தனி மரியாதையையே உருவாக்கிக்கொண்டார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
அதைத்தொடர்ந்து, மாமன்னன், சாமி- 2, பைரவா,அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் ரகு தாத்தா படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், நடிகர் அஜித் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில், "தனக்கு நடிகர் அஜித்துடன் ஜோடியாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இரு்பபதாக வெளிப்படையாக கூறிய அவர், ஆனால் அஜித்துக்கு தங்கையாக நடிக்க மாட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அஜித்தை சந்தித்த அனுபவம் குறித்து பேசிய கீர்த்தி, "நான் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கின் போது தங்கியிருந்த ஹோட்டலில் தான் நடிகர் அஜித் இருந்தார் , அங்கு நான் அவரை சந்தித்து பேசினேன் எனவும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அஜித்துக்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என கீர்த்தி கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |