திருமணத்தின் பின்னர் கீர்த்தி குடும்ப பாங்கினியாக மாறிட்டாங்களே! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி அழகிய சுடிதாரில் கழுத்தில் தாலியுடன் குடுப்ப பாங்கினியாகவே மாறி கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தனக்கென சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
அதை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.
தமிழ் சினிமாவில் மட்டுமன்றி பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் தனது கொடியை பறக்கவிட்டுள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் நடைபெற்றிருந்தது. இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணத்தின் பின்னர் கீர்த்தி அழகிழய சுடிதாரில் மஞ்சள் தாலியுடன் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |