கீர்த்தி சுரேஷின் நாய் செய்த காரியம்! அவரே வெளியிட்ட காணொளி வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்குட்டியுடன் ஒரு காணொளியை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ள விடயம் தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
நடிகை கீர்த்தி
சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் திடீர் என தன்னுடைய திருமண தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்ற கீர்த்தி அண்மையில் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
செல்ல நாயுடன் வெளியிட்ட காணொளி
இந்நிலையில் திருமணத்தின் பின்னரும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாவில் தனது செல்ல நாய் உடன் இருக்கும் காணொளியொன்றை வெளியிட்டு, அவன் என்னை தனது Pillow, Chew toy, Bridge என நினைத்துவிட்டானோ என குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |