கீர்த்தியிடம் வசமாக சிக்கிக்கொண்ட சாந்தனு...வேறொரு பெண்ணுடன் இருந்ததுதான் காரணமா?
பிரபல நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, முருங்கைக்காய் சிப்ஸ், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளர்.
இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும்கூட பெரியளவில் ஹிட் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறார்.
இவர் சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்தி என்னும் கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளார்கள்.
அப்போது சாந்தனு வேறொரு பெண்ணுடன் காபி ஷோப்பிற்கு சென்றிருக்கிறார். இதை ஒரு நண்பர் கீர்த்திக்கு தெரிவிக்க, வசமாக மாட்டிக்கொண்டாராம் சாந்தனு.
அந்த நேரத்தில் பிரேக் அப் செய்வதாக கீர்த்தி கூறிவிட்டாராம். அதன்பின்பு 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒரு பார்ட்டியில் சந்தித்து இருவரும் சமாதானமாகியுள்ளனர்.
அதன்பின்பே பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.