யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய சிவராத்திரி- படையெடுத்த மக்கள்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி பூஜையில் எடுக்கப்பட்ட காணொளியாக வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் பார்க்கப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 15 தினங்களுக்கு நடைபெறும். அத்துடன் இந்த கோயிலில், நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப்பெருமான் பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக சப்றத்தில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதேவேளை மகோற்சவத்துடன் இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும் இடமாகவும் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி பூஜைகள் எவ்வாறு நடந்தது என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |