நயினாதீவு நாகம்மை ஆலயத்தினை இடித்து கட்டப்பட்ட கோட்டையின் வரலாறு
ஆதிக் குடியேற்றப் பகுதியில் இருக்கும் உருண்டி துறைமுகம் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
உருண்டி துறைமுகம் போர்த்துக்கேயரால் ஆதிக் குடியேற்றப் பகுதியை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது.
பருத்தியடைப்பு கிராம சேவகர் பிரிவில் இருக்கும் செம்மண் கலந்த பூமியில் மக்கள் செரிந்து காணப்பட்டார்கள். ஆனாலும் கூட கோட்டை இந்த பகுதியில் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
“பழங்கோட்டை” என்ற பெயரில் சிதைந்த நிலையில் காணப்படும் கோட்டையானது நயினாதீவில் கி.பி1620ற்கும் இடைப்பட்ட காலத்தில் நாகம்மை ஆலயத்தினை இடித்து அமைக்கப்பட்டுள்ளது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அதிலுள்ள கற்கள் ஊர்காவற்துறை சங்குமால் அருகில் இன்றும் காணப்படுகிறது.
கடந்த 1950களில் கோட்டையில் கோவில் கூரை நல்ல நிலையில் இருந்தாகவும், இங்கு பிரபுக்கள் வாழும் மனை அல்லது காசில் எனக் குறிப்பிடும் இடங்கள் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோட்டைப்பகுதியில் யாழ் திருமறைக் கலா மன்றத்தினர் திருப்பாடுகளின் காட்சியை ஒளிப்படமாக்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விடயம் என்பதால் மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், உருண்டி துறைமுகம் பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.