கயல் சீரியலில் எழிலின் அதிரடி ரீஎன்ட்ரி.. வெளியானது அடுத்த வார ப்ரோமோ - வைரலாகும் காட்சிகள்!
சன் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘கயல்’ சீரியல் விரைவில் நிறைவுக்கு வர இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தைப் பிடித்து வந்த இந்தத் தொடர், சமீபகாலமாகக் கதையின் போக்கு காரணமாக ரசிகர்களின் விமர்சனங்களையும் சந்தித்து வந்தது. இந்தத் தொடரில் ஹீரோ எழிலாக நடித்து வந்த சஞ்சீவ் திடீரென விலகியது கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவர் இல்லாமலேயே கதையைத் தொடர்ந்து நகர்த்த வேண்டிய சூழலில், இயக்குநர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையில், சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சஞ்சீவ் நடிப்பிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
அவர் தொடரில் இல்லாத நிலையில், கதையிலும் எழில் கோமாவில் இருப்பதுபோலக் காட்டப்பட்டு வருகிறது. இதனால், எழில் மீண்டும் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வாரத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தப் ப்ரோமோவில், கயல் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வலம் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கயலின் இந்த வெற்றி அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் வில்லியால் இந்த வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லைஇதனால் அவர் கடும் ஆத்திரத்தில் கொந்தளிப்பது போன்ற காட்சிகள் அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இதற்கிடையில், மற்றொரு முக்கிய திருப்பமாக, வில்லியின் பிடியில் சிக்கியிருந்த எழில் அங்கிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுகிறார். இந்தப் ப்ரோமோ, அடுத்த வார எபிசோடுகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.