இலங்கையை சேர்ந்த கயல் சிரியல் நடிகை விபரீத முடிவு
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை தற்போது விபரீத முடிவு எடுத்துள்ளார்.

விபரீத முடிவு
கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இலங்கையை சேர்ந்த நடிகை சுபாசினி தற்போது சென்னையில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இவர் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக சுபாசினி போரூரில் தங்கி அதில் பிஸியாக இருந்து வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சுபாசினி இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபைரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |