குட் நியூஸ் சொன்ன கவின் - பிரியங்கா மோகன்! வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிகர் கவினுக்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாகவுள்ளார்.இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிரியங்கா மோகன்
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் பிரியங்கா மோகன்.
தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார்.
இவர்களின் கெமிஷ்ரி திரையில் நன்றாக இருந்ததால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.இந்த படமும் ஹிட்டானதால் தழிழிலும் இவருக்கொன ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகயாக மாறிவிட்டார்.
கவினுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்
இந்த நிலையில், தற்போது முதல் முறையாக சடிகர் கவினுக்கு ஜோடியாகவுள்ளார். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிய புதிய படத்தில் ஹீரோவாக கவின் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளனர்.
கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் தான் இந்த திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில், அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.



