தினமும் இத்தனையிரம் புகார்கள் வருது.. ஜெயித்தால் இதை செய்வேன்.. தி.நகர் திமுக வேட்பாளர் கருணாநிதி அதிரடி!
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தியாகராய நகர் சட்டமன்ற வேட்பாளரான ஜெ. கருணாநிதி மக்களின் குறைகளை பகிர்ந்துள்ளார். முதல் முறையாக டி. நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.
இவர் மக்களின் அடிப்படை தேவைகளை பற்றி பேசிய இவர், முதலில் போக்குவரத்து பிரச்சினை நிறையாக உள்ளது. குடிநீரில் கழிவு பிரச்சினை கலப்பதாக கூறுகிறார்கள். பொதுவாக மக்கள் என்னிடம் வைக்கும் கோரிக்கை என்றால், அது வேலை வாய்ப்பு தான் அதிகமாக கேட்கிறார்கள். அதன் பின் முதியோர் உதவி தொகை இதுவரை எனக்கு அப்படி 4500 புகார்கள் வந்துள்ளன.
மேலும், இந்த குறைகள் எல்லாம் தீர்க்க வேண்டும் என பேசிய அவர், தி. நகரில் வெற்றி பெற்றால் செய்ய வேண்டிய வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், தி, நகர் பேருந்து பணிமனை நவீன முறையில் புதுப்பிக்கப்படும் எனவும், பல அடுக்கு பேருந்து நிலையம் சர்வதேச தரத்தில் உயர்த்தப்படும். மழைநீர் தேங்காதவாறு வியாபாரங்கள் நிலையங்கள் கட்டப்படும். வியாபாரம் செய்ய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.