அப்பா 'ச்சீ த்தூன்னு' சொல்லிடுவாரு: இளையராஜா குறித்து மனம் திறந்த கார்த்திக் ராஜா
முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவைக் குறித்து அவரது மகன் கார்த்திக் ராஜா தெரியாத பல விடயங்களை கூறியுள்ளார்.
இளையராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இசைஞானி இளையராஜா. ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் ஆவார்.
பலரது தனிமை, கவலைக்கு மருந்தாக இவரது இசை இருந்து வருகின்றது. 80 வயதை கடந்த பின்பும் தற்போதும் முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இவருக்கு கார்த்திக், யுவன், பவதாரணி என மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்கள் குடும்பமே இசை குடும்பமாக வலம் வருகின்றது.
இதில் பவதாரணி சில தினங்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது இறப்பு ஒட்டுமொத்த மக்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
யுவன் சங்கர் ராஜா தற்போதும் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் நிலையில், கார்த்திக் ராஜா சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்ததுடன், அப்பாவிற்கு உதவியாகவும் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் இளையராஜா குறித்து அவரது மகன் கார்த்திக் ராஜா நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
மனம் திறந்த கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா அம்மா பிள்ளையாக இருந்தாலும், அப்பா மீது பெரிய மரியாதை எப்பொழுதுமே இருக்குமாம். இளையராஜா வீட்டிலையும் லெஜண்ட் தானாம்.
தங்களிடம் அவர் பேசுவதையே பெருமையாக நினைக்கும் நிலையில், மற்ற வீட்டில் வாப்பா போகலாம் என்று பேசுவதைப் போன்று தனது அப்பாவிடம் பேச முடியாது என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.
அப்பாவிடம் அட்வைஸ் கேட்டதுண்டா என்ற கேள்வி பதில் அளித்த கார்த்திக், அதற்கு எல்லாமல் நேரமே இருக்காது... ஏதாவது கம்போஸ் செய்ததை போட்டு காட்டினால் ச்சீ த்தூன்னு துப்பிடுவாங்க... அத்தருணத்தில் மனம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
நமக்கு வழிகாட்டாமல் இருக்கிறாங்க என்று இறுக்கமாக இருக்கும் என்றும் இசை என்று வந்துவிட்டால் குடும்பத்தையே மறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
கார்த்திக் ராஜாவின் நேர்காணலை பார்த்த ரசிகர்கள், குடும்பத்தோடு கூட நேரம் செல்வழிக்காமல் பிசியா நமக்காக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் இசைஞானி என்று பெருமைப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |