குழந்தையை பார்த்துக்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆயம்மா- கரீனா எவ்வளவு கொடுக்கிறார் தெரியுமா?
பிரபலங்களின் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக ஆயம்மா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
லலிதா டி சில்வா
தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியை பார்த்து கொள்ள ஆயாவாக இருந்தவர் தான் லலிதா டிசில்வா.
திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள இவரை தான் அதிகமாக அழைப்பார்களாம்.
அதில், பாலிவுட் நடிகை கரீனா கபூர்- நடிகர் சயிஃப் அலி கானின் மூத்த மகன் தைமூர், இளைய மகன்- ஜெஹாங்கிர் ஆகிய இருவருக்கும் இவர் தான் ஆயாவாக இருந்துள்ளார்.
லலிதாவை “தைமூரின் ஆயம்மா” என்றே பலரும் கூறுவார்கள்.
இவர் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக கரீனா கபூரிடம் மாதம் ரூ. 2.5 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
சம்பளம் குறித்து பேசிய ஆயம்மா
இந்த நிலையில் சம்பளம் குறித்து லலிதா டிசில்வாவிடம் கேட்ட போது பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “ குழந்தையை பார்த்து கொள்வதற்கு ரூ. 2.5 லட்சம் சம்பளம் வரை கரீனா கபூர் கொடுத்தார் என்பது வதந்தி. கரீனா ஒரு சிறந்த தாய். எப்போதும் ஒழுக்கமாக நடந்து கொள்வார். குழந்தைகள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்.
குழந்தைகளை மீடியாவிற்கு காட்டக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். என்னால் முடிந்தவரை அதை செய்தேன். குழந்தைகளின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |