ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் காரைநகர் சிவன் கோவில்
தமிழர் பகுதியில் “ஈழத்துச் சிதம்பரம் ” என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயில் பற்றி பலரும் அறிந்திருப்போம்.
இந்த கோயில் இலங்கை - யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் காரைநகர் உள்ளது இதில் திண்ணபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் இங்கு சிதம்பரத்திலே நடைபெறுவது போன்று பெரும்பாலும் உற்சவங்கள் நடைபெறுவதால் இது “ ஈழத்துச் சிதம்பரம்” எனும் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
அந்த வகையில் இது போன்று காரைநகர் சிவன் கோவில் பற்றி தெரியாத பல விடயங்களை தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
கோயிலின் வரலாறு
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் காரைநகர் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஆண்டி கேணி ஐயனார் கோயில் என அழைக்கப்பட்டது.
சிறப்பு உற்சவங்கள்
1. காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை உற்சவம் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகின்றது.
2. நடராஜர் இரதாரோகணம், ஆர்த்திராபிஷேகம்.
3. அபிஷேக தினத்தில் மாலையில் திருவூடல் நடைபெறும்.
4. பங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்து தினங்களுக்கு கொண்டாடப்படுகின்றது.
5. ஆடிப் பூரத்தில் நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்து தினங்களுக்கு கொண்டாடப்படுகின்றது.
6. தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் உள்ளிட்ட விஷேசங்கள் கொண்டாடப்படுகின்றன.