காரைநகர் அழகை பிரதிபலிக்கும் மீன்பிடி தொழில்- பயணிகளை சுண்டி இழுக்கும் இயற்கை காட்சி
பொன்னாலை சந்தியில் திரும்பி காரைநகர் செல்லும் வழியில் இரு பக்கமும் உள்ள கடல்கரையை பார்க்கும் பொழுது நமக்கு முதலில் கண்ணில் படுவது மீன் வலைகள் தான்.
அங்கு பல கரைவலை மீன்பிடி தொழில் நடைபெறுவதை அவதானிக்கலாம். அதிலும் குறிப்பாக மற்ற நேரங்களில் அல்லாமல் மாலை வேளைகளில் கரைவலையை பயன்படுத்தி மீன் பிடித்து சந்தையில் விற்கிறார்கள்.
சில சமயங்களில் அதிகமான சிறிய மீன்களை சில பிடித்து விற்பனை செய்வார்கள். இருந்த போதிலும் மாலை வேளைகளில் சூரியன் மறையும் அழகையும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர்களின் அழகையும் பார்த்து மகிழலாம்.
இந்த பகுதியில் வாழும் பல மீனவர்களின் தொழில் இதுவாக இருப்பதால் காரைநகருக்குரிய அடையாளங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், கரைவலை மீன்பிடி எப்படி இருக்கும்? இலங்கையில் இப்படியொரு அழகு உள்ளதா? என தெரிந்து கொள்ள ஆசைக் கொள்பவர்கள் காணொளியில் மேலதிக தகவல்களை பார்க்கலாம்.