போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டியது யாருடைய பணம் தெரியுமா? அம்பலமான உண்மை- ஷாக்கில் ரசிகர்கள்
நடிகர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஸ்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் சினிமா மீது கொண்டுள்ள ஆசை காரணமாக தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார்.
இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தங்களது விவாகரத்தை அறிவித்து விட்டு, தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
போயஸ் கார்டன் வீடு எப்படி கட்டப்பட்டது?
இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சை ஓய்ந்தாலும் போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டிய சர்ச்சை இன்னும் ஓயாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
ரஜினியை விட பல கோடி செலவில் தனுஷ் கட்டிய இந்த பிரம்மாண்ட வீட்டிற்கு அடிக்கல் நாட்டிய போது ரஜினி, ஐஸ்வர்யா, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இது குறித்து பேசிய மருத்துவர் காந்தராஜ்,“ நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முற்பணம் வாங்கி விட்டு திரைப்படத்தில் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த பணத்தை வைத்து தான் அவர் வீட்டை கட்டியுள்ளார்.
பெரிய தயாரிப்பாளர்கள் படங்களிலில் மட்டுமே நடிக்கும் தனுஷ், வட்டிக்கு வாங்கி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பலரை தவிக்க விட்டுள்ளார் ”என கூறியுள்ளார்.
அதே போன்று செய்யாறு பாலு கூறுகையில், “ தயாரிப்பாளர்கள் பலரிடம் பணத்தை வாங்கி கொண்டு அவர்களை தவிக்க விடுவது நியாயம் இல்லை” என தனுஷ் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |