கண் திருஷ்டி உங்களை வாட்டி வதைக்குதா? இதோ சக்திவாய்ந்த பரிகாரம்
உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை .
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடை ய அர்த்தம். ஒட்டு மொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான் இதன் பொருளாகும்.
இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த தோஷம் உள்ளவர்கள் அதிக சோர்வுடன் மற்றும் இனம் புரியாத கை , கால் வலிகளுடன் இருப்பார்கள்.
மேலும் நன்றாக ஓடி விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அழுதுக் கொண்டே இருந்தால் ,புதிதாக கட்டிய வீட்டில் அதுவரை இல்லாத பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்ற பிரச்சினைகள் மேல்லோங்கி காணப்படும்.
இவை எல்லாம் கண் திருஷ்டி தோஷத்தினால் உருவானது என்று நம்பப்படுகிறது.
அந்தவகை யில் இவற்றை நீக்க சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
பரிகாரங்கள்
1. சதுர அளவிலான வெள்ளை துணியில் காய்ந்த மிளகாய், கற்பூரம், கல் உப்பு, வெண்கடுகு மற்றும் மண்னை சேர்த்து கட்டிக் கொள்ளுங்குகள்.
2. கட்டிய மூட்டை யை வலது பக்கம் இருந்து இடது பக்கமும், இடது பக்கம் இருந்து வலது பக்கமும் தலையை 3 முறை சுற்றி, வெளியில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
குறிப்பு:- ஞாயிற்று கிழமை இரவு நேரத்தில் செய்வது நல்லது.