அனாதை ஆசிரமத்திற்கு கிளம்பிய ஹேமா! பொங்கி எழுந்த கண்ணம்மா சொன்ன உண்மை
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஹேமாவிடம் கண்ணம்மா உண்மையை உடைத்த காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்த நிலையில், வெண்பாவின் திருமணத்தில் அவரின் சுயரூபத்தினை பாரதி அறிந்துள்ளார்.
வெண்பாவின் திருமணம்
பாரதியை திருமணம் செய்துகொள்ள வெண்பா திட்டம் தீட்டிய நிலையில், கண்ணம்மா திருமணத்தை நிறுத்தி சரியான பாடம் கற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஹேமா தான் அனாதை என்பதால் அனாதை ஆசிரமத்திற்கு செல்வதாக கூறி பெட்டியை எடுத்து கிளம்புகின்றார். அத்தருணத்தில் கண்ணம்மா நான் தான் உனது அம்மா என்று கூறி உண்மையை உடைத்துள்ளார்.