வீட்டுக்குள் வந்தால் துப்பாக்கியால் சுடுப்படுவீர்கள்! பிரபல நடிகை மிரட்டல்
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்திலும் தலைவி படத்திலும் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது சந்திரமுகி - 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மும்பையில் இருக்கும் அவரது வீட்டை பழுது பார்க்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டின் வெளியே வைத்துள்ள அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகமொன்று அனைவரையும் மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வாசகமானது, 'வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்' என்பதாகும்.
இதனைப் பார்த்தவர்கள், அறிவிப்பு பலகையில் இவ்வாறு எழுதியிருப்பது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.