கொரோனா பாதிப்பால் அடுத்த இயக்குநர் திடீர் மரணம்- அதிர்ச்சியடைந்த திரையுலகம்
கொரோனாவால் பல திரைப்பிரபலங்கள் மரணமடைந்து வரும் நிலையில், இளம் கன்னட இயக்குநர் நவீன் மரணமடைந்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஒன்டே படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் நவீன்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த நவீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார். 36 வயதே, ஆன நவீன் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவரின் உடல் சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் கன்னட திரையலகில் இது மூன்றாவது மரணம் ஆகும்.