வீடுகளில் அடுத்தடுத்து சிக்கல்கள்? உடனே இந்தப் பரிகாரங்களை செய்திடுங்கள்
பொதுவாகவே எம்மில் எல்லோருக்கும் கண் திருஷ்டி மேல் நம்பிக்கை இருக்கும். என்னதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்தாலும் திருஷ்டி மேல் இருக்கும் நம்பிக்கை மாத்திரம் பழமையானது.
இந்தக் கண் திருஷ்டியால் குடும்பத்தில் எப்போதும் பலப் பிரச்சினைகள் பொருளாதார இழப்பு, குடும்பத்தில் சண்டை சச்சரவு போன்ற சிக்கல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கும். இந்த கண் திருஷ்டியைப் போக்குவதற்கு எளிய பரிகாரங்கள் இவைதான்.
கண் திருஷ்டி பரிகாரங்கள்
குளிக்கும் போது தண்ணீரில் கல் உப்பு கலந்து வாரம் ஒரு முறை குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி இருக்காது.
கல் உப்பைக் கொஞ்சமாக கையில் எடுத்து மூன்று முறை தலையில் சுற்றி ஓடும் தண்ணீரில் போட வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என்றால் வேஷ்டியில் ஒரு சிறிய துணியை கிழித்து திரி செய்து அந்த திரியில் தலையில் இருந்து கால் வரைக்கும் இரண்டு பக்கமும் தடவி சுவரோரத்தில் வைத்து எரித்து விட வேண்டும்.
கடுகு, உப்பு 3 காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை சுற்றி விட்டு எறியும் விறகு அடுப்பில் போட வேண்டும்.
வீட்டு வாசலில் பௌர்ணமி தினத்தில் நீர் பூசணி கட்டி தொங்க விட்டால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் நுழையாது.
வளர்ப்பிறை வெள்ளிக்கிழமை நாளில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்க விடவேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |