வந்த வேலையைப் பாருடா...கம்ருதீனிடம் பாருவை விளாசிய அக்கா!
பிக்பாஸ் வீட்டுக்குள் கமருதீனின் அக்கா, மச்சான் மற்றும் அவர்களின் குழந்தை என மூவரும் வந்துள்ளனர். இந்நிலையில் கம்ருதீனின் அக்கா கமருதீனுக்கு கொடுத்த அட்வைஸ்கள் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமான மனநிலை உருவாகியுள்ளது.

காரணம் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்வதால் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஒரே கலகலப்பாகவும் எமோஷனலாகவும் இருப்பதால், பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்துவருகின்றார்கள்.
இந்நிலையில் மொத்த போட்டியாளர்களில் பார்வதியின் குடும்பத்தினர் வீட்டில் 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பை வென்றுள்ளார். இதனால் பார்வதியின் அம்மா காலையிலேயே வந்துவிட்டார்.

அதனை தொடர்ந்து, கம்ருதீனின் அக்கா, மச்சான் மற்றும் அவர்களின் குழந்தை என மூவரும் வந்துள்ளனர்.
இந்நிலையில் கம்ருதீனின் அக்காவை வரவேற்றபோது பார்வதி, அக்கா வாங்க என்று கூறினார். பார்வதியின் அம்மாவும் வீட்டினுள் இருந்தால் பார்வதி இப்படி அழைத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றார்கள்.

இந்நிலையில், கம்ருதீனின் அக்கா, பார்வதியைப் பார்த்து, அக்காவா என்று கேட்டார். அதையடுத்து கமருதீனிடம் நீ இங்கு எதற்கு வந்தாயோ அதை செய், அதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை செய்யாதே. அதைப்பற்றி கேட்க எனக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டார்.

மேலும் வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் இடம் இது கிடையாது. எனவே ஆட்டத்தில் கவனமாக இரு. நான் உள்ளே வரும்போது பார்வதி என்னை வாங்க அக்கா என்று சொல்லி வரவேற்றார்.
அதாவது தங்கச்சி, அதனால் உனக்கும் தங்கச்சி" தான் என குறிப்பிட்டார். அத்துடன் வெளியில் போகும் போது தலை நிமிர்ந்து செல்ல வேண்டும் என்பதையும் சைகை மூலம் நாசூக்காக குறிப்பிட்டார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |