புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கண்கலங்கிய 'கமல்'!...
உலக நாயகன் கமல்ஹாசன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம்முடைய ரசிகர் ஒருவரிடம் இணையவழி வீடியோ சந்திப்பில் பேசியிருக்கிறார்.
வெளிநாட்டில் வாழும் சாதிக் என்னும் உலகநாயகனுடைய ரசிகர் ஒருவர் மூளை புற்றுநோயால் பாதிப்படைந்து இருக்கிறார்.
ஆனால் கமல்ஹாசனுடன் பேச வேண்டும் என்கிற அவருடைய நீண்ட நாள் ஆசையை அறிந்த அவருடைய நண்பர்கள் தற்போது அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.
அதற்காக, கமல்ஹாசனுடன் இணையவழிச் சந்திப்பில் உரையாடுவதற்கு திடீரென்று ஒரு வீடியோ சந்திப்பை அவருடைய நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதனை அறிந்ததும் சாதிக் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். அவருடன் பேசிய கமல்ஹாசன் அவருக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறார்.
கமல்ஹாசனுடன் சாகித் மகிழ்ச்சியுடனும் புது ஆற்றலுடனும் பேசும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பலரும் இதுபற்றி கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
உலகநாயகனின் இந்த நிகழ்ச்சி செயலை மக்களும் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.