பிக்பாஸ் சீசன் 7 ன் நியூ லுக் கமல்.. எப்படி இருக்காரு பாருங்க! டீசரே கலக்கலா இருக்கே..
கோடிக்கணக்கான ரசிகர்களை வென்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டீசர் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இது தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி என பன் மொழிகளில் துவங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலப்பகுதியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இவை அணைத்தையும் கமல்ஹாசன் அவர்கள் பேசி ஒரு வழியாக சமாளித்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது தான் முதல் இடத்தில் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் விரைவில் துவங்கும் என கூறப்பட்டது.
பிக்பாஸ் 7 ன் அதிரடியாக வெளியான டீசர்
இந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 7 ற்கான முதல் டீசர் இன்று இரவு 7 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
யாரும் இல்லாத கடலுக்கு நடுவில் நின்று மௌனமாக சிரித்துக்கொண்டே பார்க்க தயாராக இருங்கள் என கைகளால் சைகை காட்டுகிறார்.
இந்த முறை பிக்பாஸ் லோகோ பூக்களின் வடிவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் மற்றும் கோல்டன் நிறத்தில் இது உள்ளது.
அதிகாரப்பூர்வ இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். “டீசரே இவ்வாறு இருந்தால் கண்டிப்பாக இந்த சீசன் கலைக்கட்டும்” என ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.