வேற மாறி வீடியோ... விருமாண்டியாக மாறிய CSK வீரர்கள்! ஆண்டவரே இதை பார்த்தீங்களா?
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர்களை விருமாண்டி குடும்பத்தார்களின் முகங்களை மார்ஃப் செய்யப்பட்ட மீம் வைரலாக பரவி வருகிறது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த மே மாதம் கொரோனா 2வது அலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் மீதம் உள்ள போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது.
இதில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபரமாக விளையாடி முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதுகுறித்த பல மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் முகத்தை வைத்து நடிகர் கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் வரும் புகைப்படமான விருமாண்டி தனது குடும்பத்தாருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் மார்ஃபிங் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விருமாண்டி குடும்பமாக மாற்றியது போல ஒரு மீம் வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளனர்.
🤩🔥🔥🔥🔥 pic.twitter.com/leZbvjiU9t
— கைப்புள்ள 🙅🙅🙅 (@kaipulla0353) September 25, 2021