திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றுக்கொண்ட கமல்ஹாசன் மனைவி: பல ஆண்டுகள் கழித்து வைரலாகும் செய்தி!
கமல்ஹாசனும் சரிகாவும் திருமணத்திற்கு முன்பு குழந்தைப்பெற்றுக்கொண்டதாக ஒரு செய்தி தற்போது வைரலாக பரவி வருகின்றது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக நடித்து வந்தவர்தான் இவர். அக்காலத்தில் பல நடிகைகளுடன் பல கிசு கிசு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
திருமணத்திற்கு முன் குழந்தை
கமல்ஹாசன் முதலில் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் இதில் தான் ஒரு செய்தி இருக்கிறது.
அதாவது, கமல்ஹாசனுக்கும் சரிகாவுக்கும் திருமணம் ஆன ஆண்டு 1988 ஆம் ஆண்டு. ஆனால் ஸ்ருதிஹாசனோ 1986 ஆம் ஆண்டே பிறந்துவிட்டார்.
கமல்ஹாசனும் சரிகாவும் லிவ் இன் உறவில் இருந்தபோதே ஸ்ருதிஹாசன் பிறந்திருக்கிறார்.
இந்த விடயம் தற்போது தான் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.