வெளியானது விக்ரம்.. லோகேஷ் கனகராஜ் கூட்டணி வெற்றியா? முழு விமர்சனம்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயங்கர எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியான படம் தான் விக்ரம்.
இப்படத்தில், கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், இன்று திரையரங்கில் ரீலிசான இப்படத்திற்கு படம் ஆரம்பத்தில் இருந்தே அமர்க்களம் தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் ஹாசனை திரையில் ரசிகர்கள் கண்டவுடன் திரையரங்கமே அலப்பறை சத்தம் தான்.
போதைப்பொருட்கள் தொழில் செய்வதை தடுக்கும் நோக்கில் இறங்கிய கமலுக்கு வெற்றி கிடைத்ததா என்பதை படத்தின் முக்கிய கதை.
நடிகர் சூர்யாவின் என்ட்ரி படத்திற்கு இறுதியாக கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனிருத்தின் இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக லோகேஷ் கனகராஜிற்க்கு இப்படம் வெற்றி தான்...
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு விக்ரம்
3.5 / 5