சூர்யாவைத் தொடர்ந்து தனக்கு கமல் கொடுத்த பரிசு என்ன? உண்மையை உடைத்த அனிரூத்
நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட இயக்குனர், மற்றும் படத்தில் நடித்த சூர்யா இவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கிய நிலையில், அனிரூத்திற்கு அளித்த பரிச குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா உட்பட பல பிரபலங்கள் நடித்து வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றியால் குஷியில் இருக்கும் கமல், அதில் பணியாற்றியவர்களுக்கு படிப்படியாக பரிசுகளை வழங்கி வருகிறார். இதுவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்சும் வழங்கிய கமல், இப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக அளித்துள்ளார்.
அனிரூத்திற்கு என்ன பரிசு?
இதேபோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோருக்கும், சிறப்பாக இசையமைத்திருந்த அனிருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் இதுவரை எந்தவித பரிசும் அவர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பிய நிலையில், அனிரூத் இதற்கான பதிலை கொடுத்துள்ளார்.
அண்மையில் கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் சென்றிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அனிருத்திடம், கமல் உங்களுக்கு என்ன பரிசு அளித்தார்? என கேட்டார்.
இதற்கு, கமல் சார் எனக்கு விக்ரம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததே பரிசு தான் என அசத்தலான பதிலைக் கூறியுள்ளார்.