அந்த விஷயத்தில் கமல், அஜித் துரோகம் செய்தார்கள்? பிரபல நடன இயக்குநர் ஆவேசம்!
இந்தியாவில் பல கலைகள் இருந்தாலும் பரத கலைக்கு மட்டும் பெரிய மரியாதை இருந்து வருகிறது. பெண்கள் மட்டும் இந்த கலையை கற்று கொள்ளும் என்ற நிலைப்பாட்டை மாற்றி தற்போது முன்று பாலினத்தினரும் கற்று கொண்டு வருகிறார்கள். சமிபகாலமாக சினிமாவில் பரத கலையை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்து வருகிறார்கள் என்று பிரபல நடன இயக்குநரின் மகன் கே ஸ்ரீ ராம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக நட்னா இயக்குநராக பணியாற்றி பிரபலமானவர் பி கே முத்து.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பரதம் கற்றுக்கொடுத்தவர் தான் இவர். முன்னணி நடிகர்கள் படத்தில் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றி வந்தார். அவரது மகனான கே ஸ்ரீ ராம் கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் பரதத்தை தவறாக சித்தரித்தனர் என்று ஆவேசமாக கூறி வருந்தியுள்ளார். அதாவது வரலாறு படத்தில் அஜித் பாரத கலைஞராக நடித்திருப்பார்.
ஆனால் இப்படத்தில் பரதக்கலை கற்றுக் கொண்டதால் அஜித் பெண் தன்மை இருப்பதாக படத்தில் சித்தரித்து. இதனால் இவருக்கு திருமணம் ஆகாதது போல் படத்தில் காட்டியிருப்பார்கள். விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் பரத கலைஞராக நடித்திருப்பார். இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டாலும் இப்படத்தில் பரத கலைஞராக கமலஹாசன்யிருப்பதால் மனைவி அவரை வெறுத்து ஒதுக்குவார்.
இந்த மாதிரி ஒரு சிலர் தவறான கருத்துக்களை முன்வைத்து பரதக் கலையை படத்தில் சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ந்த விஷயத்தில் நடிகர் அஜித் மற்றும் கமல்ஹாசன் உச்ச நட்சத்திரமாக இருந்து பரதக்கலை துரோகம் செய்துள்ளதாக கே ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். பரத கலையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி நல்ல படியாக படங்களை எடுத்தாலெ போதும் என்றும் கூறியுள்ளார்.