கணவர் பிறந்தநாளில் காஜல் அகர்வால் அணிந்திருந்த ஆடை இத்தனை லட்சமா? நம்பவே மாட்டீங்க
நடிகர் காஜல் அகர்வால் தனது கணவர் பிறந்தநாளன்று அணிந்திருந்த ஆடையின் மதிப்பு 1.2 லட்சம் என தகவல் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஜல் அகர்வால்
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல் சமீபத்தில் ஒரு புகைப்படத்தினையும் பதிவு செய்துள்ளார்.
தனது கணவருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே ஒரு கையில் குழந்தையை இருவரும் கையில் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் லைக்ஸும் குவி்நதது.
காஜல் அகர்வால் ஆடை இத்தனை லட்சமா?
காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அப்பொழுதே தனது குழந்தை மற்றும் கணவருடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிகப்பு நிற ஆடையில் கணவருடன் மற்றொரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் அணிந்திருக்கும் ஆடை பேச்சு பொருளாக மாறியுள்ளது.
காஜல் அகர்வால் அணிந்திருந்த Red Banarasi ensemble ஆடையின் மதிப்பு 1.2 லட்சம் என்று கூறப்படுகின்றது. குறித்த புகைப்படமும் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகின்றது.