காஜல் அகர்வால் மகனுக்கு வைத்த உண்மையான பெயர் என்ன? வெளிவந்த சீக்ரெட்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தனது மகனின் உண்மையான பெயரை முதன்முறையாக கூறியுள்ளார்.
காஜல் அகர்வால்
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு நீல் கிச்சலு என்று பெயர் வைத்துள்ளனர்.
அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெற்று வரும் இவரது மகனின் உண்மையான பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராக வரும் நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. தனது குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு இவ்வாறு காஜல் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுவந்தது.
ஆனால் இதற்கு காஜல் அகர்வால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் ஏன்று கூறி வதந்திக்கு முற்றுப்புளி வைத்தார்.
மகனின் ஒரிஜினல் பெயர்
சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு அளித்துள் போட்டி ஒன்றில் மகனின் உண்மையான பெயர் குறித்த உண்மையைக் கூறியுள்ளார்.
அதாவது காஜல் சிவன் மீது அதிக பக்தி கொண்டவர் என்பதால், தனது மகனுக்கு சிவனின் பெயரை வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் எளிதில் அழைக்கக்கூடிய பெயராக இருக்க வேண்டும் என்பதையும் நினைத்து, சிவபெருமானின் மற்றொரு பெயரான நீலகண்டன் என்ற பெயரை தெரிவு செய்துள்ளனர்.
அழைப்பதற்கு ஏற்ப நீலகண்டன் என்ற பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நீல் என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த உண்மையை அறிந்த ரசிகர்கள் காஜல் சிவனின் இவ்வளவு தீவிர பக்தையா என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |