Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்
வாழ்க்கைக்கு தேவையான பணத்தை தேடி மனிதன் எவ்வளவு ஓடினாலும் அவன் சிரிப்பதில் தான் அன்றைய நாள் அவனுக்கு முழுமை பெறும். மனித வாழ்க்கையில் சிரிப்பு தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. இதற்காக தான் தற்போது இணையத்தில் கடி ஜோக்ஸ் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ். இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆனால் நண்பா்களை கடுப்பேத்தவும் இந்த கடி ஜோக்ஸ் பெரிதும் உதவும், இந்த பதிவில் வாங்க கடி ஜோக்ஸ் படிக்கலாம். நண்பர்களை கடுப்பேத்தலாம்.
கடி ஜோக்ஸ்
நண்பன் 1 டேய் நண்பா நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லுடா | நண்பன் 2 - பனியன்டா |
மனைவி குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா? | கணவர் - நாம கேட்டா அவரு கொடுக்கவா போராரு? |
டீச்சர் ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு? | மாணவன் - அது ராமனோட கஷ்டகாலம் சார் |
டீச்சர் நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க? | மாணவன் - எண்ணெய் சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு டீச்சர் ! |
கணக்கு வாத்தியார் கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க.? | மாணவன்- சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று அது தான் டான்ஸ் ஆடரன் |
நண்பன் 1 ஏண்டா மெதுவா லட்டர் எழுதுற ? | நண்பன் 2 -எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது டா மச்சான் அதான் மெதுவா எழுதுறன் |
நண்பன் 1 500 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க! | நண்பன் 2 - அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க! |
அம்மா டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும். | பையன் - நான் பனியில நிக்கலமா! காலில் தான் நிற்கிறேன். |
வாத்தியார் மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி? | மாணவன்- ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல சார், அதான் கீழ வந்துடுது சார். |
பல் மருத்துவர் எங்கே ஈ காட்டு பாக்கலாம்? | நோயாளி நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்! |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |