வீட்டில் கிரிக்கெட் விளையாடிய பெண்ணை பிரபல நடிகையாக்கிய இயக்குநர் பாலச்சந்தர்! அவர் யார்ன்னு தெரியுமா?
வீட்டில் கிரிக்கெட் விளையாடிய பெண்ணை பிரபல நடிகையாக்கிய இயக்குநர் பாலச்சந்தரைப் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலச்சந்தர்
1980 - 1990களின் காலக்கட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜாவும், பாலச்ச்சந்தர், பாலு மகேந்திரா போன்ற பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினர். அந்த நடிகர், நடிகைகளின் இயற் பெயரைக் கூட சினிமாவிற்காக வேறு பெயர்களை வைத்துள்ளனர். இவர்கள் அறிமுகப்படுத்திய நடிகர் - நடிகைகள் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
இயக்குநர் பாலச்சந்தர் ஒரு நடிகர், நடிகையை பார்த்தவுடனேயே அவர்கள் சினிமாவின் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவார்கள் என்று கணித்து விடுவாராம். பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நடிகர் தான் ரஜினி. இவரைப் பார்த்தவுடனேயே ரஜினியிடம் நீ சினிமாவில் பெரிய ஆளாகிவிடுவாய் என்று கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடி நடிகை
‘அழகன்’ படத்திற்காக கதாநாயகியை பாலச்சந்தர் தேடிக்கொண்டிருந்தாராம். அப்போது, மதுபாலாவின் உறவினருக்கு பாலச்சந்தரிடம் நல்ல நட்பு இருந்துள்ளது. அந்த உறவினர் வீட்டிற்கு பாலச்சந்தர் சென்றபோது நடிகை மதுபாலா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, மதுபாலாவை பாலச்சந்தர் அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்திருப்பது பெரிய இயக்குநர் என்று மதுபாலாவிற்கு தெரியாதாம். உடல் வியர்க்க, வியர்க்க பாலச்சந்தரை பார்க்க வந்தாராம். மதுபாலாவைப் பார்த்தவுடனேயே இந்த பொண்ணு நல்லா அழகாக இருக்கிறாள். இவர் சிறந்த நடிகையாக வருவார் என்று நினைத்தாராம்.
உடனே, நான் அடுத்த படம் எடுக்கப்போகிறேன். என் அடுத்த படத்தில் நீதான் கதாநாயகி என்று கூறிவிட்டு சென்றாராம். சொன்னபடியே தமிழில் ‘அழகன்’ படத்தில் நடிகை மதுபாலாவை அறிமுகப்படுத்தினார்.
இதன் பிறகு மதுபாலா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபல நடிகையாக வலம் வந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |