அண்ணி ஜோதிகாவின் Work Out பார்த்து கார்த்தி என்ன செய்தார்ன்னு தெரியுமா?
அண்ணி ஜோதிகாவின் Work Out பார்த்து கார்த்தி செய்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, அர்ஜூன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
2007ம் ஆண்டு ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஜோதிகா நடித்து வருகிறார்.
வெறித்தனமாக Work Out செய்த ஜோதிகா
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கடுமையான வொர்க் அவுட் செய்த வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாயடைத்து போனார்கள்.
இந்த வீடியோவைப் பார்த்த சூர்யாவின் தம்பி கார்த்தி, ‘அண்ணி... சரியான பீஸ்ட் மோட் அண்ணி’ என்று கமெண்ட் செய்தார். இதற்கு பதிலளித்த ஜோதிகா... ‘நன்றி கார்த்தி! இந்த நிலைமைக்கு வர எனக்கு பத்து மாதங்களானது’ என்று கூறினார்.
அதேபோல், நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா, ஜோதிகாவின் வீடியோவைப் பார்த்து, ‘மைண்ட் புளோயிங் அண்ணி.. உங்களிடம் ஏராளமான பவர் இருக்கிறது’ என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா ‘இது உண்மையான பெண்களின் பவர் பிருந்தா’ என்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |